பீஜாமிர்தம்
விதைக்கும் முன் விதைக்கு ஊட்டமளிக்க இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கலவையே பீஜாமிர்தம் எனப்படும்.
தயாரிக்க தேவையான பொருட்கள்
- தண்ணீர் 20 லிட்டர்
- பசு மாட்டு சாணம் 5 கிலோ
- பசு மாட்டு கோமியம் 5 லிட்டர்
- சுத்தமான சுண்ணாம்பு 50 கிராம்
- ஜீவனுள்ள மண் ஒரு கைப்பிடி அளவு
பீஜாமிர்தம் தயாரிக்கும் முறை
முதல் நாள் மாலை 6 மணிக்கு மேற்ச் சொன்ன அனைத்தை பொருள்களையும் ஒன்றாக ஒரு கலனில் கலந்து வைத்துவிட வேண்டும். பின்னர் இந்த கலவையை மறுநாள் காலை 6 மணி வரை நன்றாக ஊற விடவேண்டும். இக்கலவையே பீஜாமிர்தம்மாகும். முதல் நாள் மாலையில் கலந்து வைத்தால் அடுத்த நாள் காலையில் இதை விதைகளின் மேல் தெளிக்கலாம்.
பீஜாமிர்தம் எப்படி பயன்படுத்துவது
விதை நேர்த்தி செய்ய வேண்டிய விதைகளை இந்த கரைசலில் 2 மணி நேரம் ஊற விட வேண்டும். நாற்றுகளாக இருந்தால் அதன் வேர்களை இந்த கரைசலில் நன்றாக நனையவிட்டு பிறகு நடவு செய்ய வேண்டும்விதை நெல்லை எவ்வாறு நேர்த்திசெய்வது
- 10 லீட்டர் தண்ணிரில் 1 கிலோ கல்லுப்பை கரைத்து, அதில் 10 கிலோ விதைநெல்லை இடவேண்டும். தண்ணிரில் மிதக்கும் விதைகளை நீக்கிவிட்டு, மூழ்கிய நெல்லை மட்டும் எடுத்து நீரில் அலசி, அதிலிருந்து 9 கிலோ நெல்லை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் பிஜாமிர்தத்தில் 2 மணிநேரம் ஊறவைத்து விதை நேர்த்தி செய்யவேண்டும்.
- அடுத்து சணல் சாக்கில் நெல்லை கொட்டி மூட்டையாகக் கட்டி 12 மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து எடுத்து அதன்பின் 24 மணிநேரம் இருட்டில் வைத்து பின்னர் விதைக்க வேண்டும்.
- இந்த விதைகளை நாற்றங்காலில் தூவி, விதைகள் வளர்ந்து 25 முதல் 30 நாட்களில் நாற்றானதும் அவற்றை எடுத்து வயலில் நடுகிறோம். நெல் நாற்றுகளை வயலில் நட்ட பிறகு, முதல் நீர் பாய்ச்சும்போது ஜீவாமிர்தம் என்னும் மற்றொரு கலவையை சேர்த்துப் பாய்ச்ச வேண்டும்.
பீஜாமிர்த்தின் நன்மைகள்
- வேர் அழுகல், வேர்க்கரையான், வேர்ப்புழு நோய்கள் தாக்குதள் தடுக்கப்படும்
- எல்லா வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். எந்த விதகட்டுபாடும் இல்லை
- தகவல்
- இந்த பீஜாமிர்தம் வேளாண் வித்தகர் சுபாஷ் பாலேகர் ஐயா அவர்களால் வழங்கபட்டது