நூற்புழுவை கட்டுப்படுத்தும் பேசிலோ மைசிஸ்
இது ஒரு நூற்புழுவை (நெமெட்டோட்ஸ்) கட்டுப்படுத்தும் பூசாணமாகும். எல்லாவிதமான மலைத்தோட்டப்பயிர்களும் (உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், காலிபிளவர், சவ்சவ்) பல வகையான நூற்புழுக்களின் தாக்குதலினால் மகசூல் பாதிக்கப்பட்டு செடிகள் மடிகின்றன. இந்த பேசிலோமைசிஸ் பூஞ்சாணம் அந்த நூற்புழுக்களை முட்டையிலிருந்து கடைசி பருவம் வரை தாக்கி அழிக்கிறது. இந்த வகையான நூற்புழுக்கள் பயிரின் வேரை அழிப்பதனால் அழுகல் நோய் உண்டாகக் கூடிய பூஞ்சாணங்கள் மிகவும் எளிதாக பயிர்களை தாக்க ஏதுவாகிறது. பேசிலோமைசிஸ்ஸை நிலத்தில் இடுவதன் மூலம் நூற்புழு மற்றும் வேர் அழுகல் நோய்களை இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம்.
மலைத்தோட்டப்பயிர்களில் விதை நேர்த்தி செய்வதற்காக டிரைபோமிக்ஸ் என்ற புதிய இயற்கை வழி மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை 1 கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் விதை நேர்த்தி செய்வதன் மூலம் பயிர்களைத் தாக்கக் கூடிய அழுகல் நோய்கள் மற்றும் நூற்புழுக்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. உருளைக்கிழங்கிற்கு டிரைபோமிக்ஸ் 1 கிலோவிற்கு 1 கிராம் வீதம் வழக்கமான முறையில் விதைநேர்த்தி செய்து விதைக்கவும். நிலத்திற்கு அசோஸ்பைரில்லம் – 2 கிலோ, பாஸ்போ பாக்டீரியா- 2 கிலோ, டிரைகோடெர்மா – 2 கிலோ, பேசிலோமைசிஸ் – 2 கிலோ அல்லது டிரைபோமிக்ஸ் – 3 கிலோ அளவில் இட்டு கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், காலிபிளவர் மற்றும் சவ்சவுக்கும் பயன்படுத்தலாம்.
நன்றி
தினமலர்