திறன்மிகு நுண்ணுயிர்கள்
நுண்ணுயிர்கள் இருவகைப்படும். அதாவது தீமை பயக்கும் நுண்ணுயிர்கள் (நோய் உண்டாக்கும் நுண்ணுயிர்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நுண்ணுயிர்கள் போன்றவை) மற்றும் நன்மை பயக்கும் நுண்ணுயிர்கள். திறன்மிகு நுண்ணுயிர்கள் நன்மை பயக்கும் நுண்ணுயிர்கள் வகையைச் சார்ந்ததாகும். ஜப்பான் நாட்டில் ஒகினவாபில் உள்ள நியூக்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் ஹிகா என்பவர் அற்புதமான திறன்கொண்ட நன்மை பயக்கும் நுண்ணுயிர்களின் கூட்டுக் கலவையை கண்டறிந்து அதற்கு திறன்மிகு நுண்ணுயிர்கள் என்று பெயரிட்டார். தொழு உரம், மக்கு உரம் போன்ற பெரும்பாலான உரங்களில் அதிக அளவிலான நுண்ணுயிர்கள் உள்ளன. இந்நுண்ணுயிர்களை மண்ணில் இடுவதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன.
இத்திறன்மிகு நுண்ணுயிர்களை நடவு செய்த முதல் 3-4 வாரங்களுக்கு 8-10 நாட்கள் இடைவெளியில் மண்ணில் இடுவதால் இளம் நாற்றுகள் வறட்சி, வெப்பம், நோய் மற்றும் களை போன்ற சுற்றுச்சூழல் அழுத்தங்களை எதிர்கொண்டு வளரும் திறனை பெறுகின்றது. (தகவல் : முனைவர் ர.பரிமளாதேவி, முனைவர் அ.பரணி, வளங்குன்றா அங்கக வேளாண்மைத்துறை, த.வே.ப.கழகம், கோயம்புத்தூர்-641 003. தொலைபேசி : 0422 – 661 1206).
நன்றி
தினமலர்