களை மேலாண்மை
1. கோரைப்புல்லினை கட்டுப்படுத்தும் முறைகள் யாவை?
இது அனைத்துப்பயிர்களிலும் தோன்றி மிகுந்த சேதத்தினை ஏற்ப்படுத்துகிறது.
இதனை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாகவும் செலவு மிக்கதாகவும் உள்ளது.
ஒரு கோரைக்கிழங்கு ஒரு வருடத்தில் 1900 கோரைகளை உருவாக்குகிறது. கோடை உழவு செய்து கிழங்குகளை அப்புறப்படுத்தலாம்.
நீர் பாசன வசதி உள்ள வயல்களில் உழவிற்குப் பின்னர் தொடர்ந்து நீர் தேக்கி வைத்து கிழங்குகளை அழுக விடலாம்.
பயிர் சுழற்சியில் சோளத்தினைப் பயிர் செய்தால் இதன் பெருக்கம் குறையும்.
மூடாக்குப்போட்டு கிழங்குகளின் வளர்ச்சியினை கட்டுப்படுத்தலாம்.
2. உயிர்க் களைக்கொல்லிகளைப்பற்றி தெரிந்து கொள்வோமா?
சில பூச்சிகளும் பூசணங்களும் விவசாயிகளுக்கு நன்மை செய்யும் வகையில் சில களைச் செடிகளை கட்டுப்படுத்த உதவுகிறது. இவை பயிர்களுக்கு சேதத்தினை ஏறப்படுத்தாது.
உதரணமாக சப்பாத்திக் கள்ளியினை டாக்டைலோப்பஸ் என்ற மாவுப் பூச்சியினை விட்டும் பார்த்தினியத்தினை சைக்கோகிரம்மா என்ற வண்டினைக் கொண்டும் மற்றும் மலைப்பகுதியில் காணப்படும் உண்ணிச் செடியினை ஒரு வித வண்ணத்துப் பூச்சி மற்றும் வண்டு விட்டும் கட்டடுப்படுத்தலாம்.
3. பொது இடங்களில் பார்த்தினியத்தினை கட்டுப்படுத்தும் இயற்கையான முறைகள் யாவை?;
ஒரு வித ஆவாரைச் செடிகளை பார்த்தினியம் வளரும் இடங்களில் மழைக்காலத்தில் விதைத்து விட்டால் ஆவாரைச் செடியின் வேரிலிருந்து சுரக்கும் திரவம் பார்த்தினிய விதை முளைப்பதனைத் தடுக்கும்.
துணி அலசிய சோப்புத்தண்ணிருடன் சமையல் உப்பினை சேர்த்து தெளிக்கலாம்.
சைக்கோகிரம்மா என்ற வண்டினை வாங்கி விடலாம். தொழுஉரத்தினை நன்கு மக்க வைத்து வயலில் இடவேண்டும்