சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், 2015 அக்டோபர் 1ம் தேதி, பரண் மேல் வெள்ளாடுவளர்ப்பு தொழில் நுட்ப பயிற்சி நடக்கிறது. இது குறித்து, சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் கூறியதாவது:
வேளாண் சார்ந்த உப தொழிலில், வெள்ளாடு வளர்ப்பு, குறைந்த முதலீட்டில், நிறைய லாபம் தரும் தொழிலாக உள்ளது. விவசாயிகள், பண்ணை மகளிர் மற்றும் இளைஞர்கள் பயன் பெறும் வகையில், 2015 அக்டோபர் , 1ம் தேதி, காலை, 9.30 முதல் மாலை, 4 மணி வரையில், சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், பரண் மேல் ஆடு வளர்ப்பு தொழில் நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோர், 30ம் தேதிக்குள் தங்கள் பெயரை, 04272422550 எண்ணில் பதிவு செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
நன்றி: தினமலர்