கடந்த ஒன்றரை ஆண்டிற்கு முன்பு பயிரிட்ட பப்பாளி 9 மாதங்களில் நல்ல மகசூலை கொடுத்துள்ளது. ஒரு ஏக்கருக்கு 60 டன் பப்பாளி உற்பத்தியாகிறது. இதை தேனி மாவட்டத்தை சேர்ந்த மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்து, கொச்சி, எர்ணாகுளம், தூத்துக்குடி துறைமுகங்கள் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்புகின்றனர். இந்த பழங்கள் நல்ல சுவை கொண்டது. கெட்டு போகாது. சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம் என்கிறார் விவசாயி நடராஜன். அவர் கூறியதாவது:
சரியான நீர் மேலாண்மை, உர நிர்வாகம், கண்காணிப்பு இருந்தால் பப்பாளி பயிரிட்டு நல்ல மகசூல் பெறலாம். உரம், மருந்து அடித்தல், வேலையாட்கள் கூலி என ஏக்கருக்கு ரூ.ஒரு லட்சம் வரை செலவிட்டு மிகுந்த கவனத்துடன் செயல்பட்டால் ஏக்கருக்கு ரூ. 5லட்சம் வரை லாபம் ஈட்டலாம்.
இன்றைய காலத்தில், விவசாயத்தை பொறுத்தவரை காலத்திற்கு தகுந்தாற்போல் மாற்றி யோசித்து பயிரிடவேண்டும். நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நீர் மேலாண்மையை கடைப்பிடித்து அதிக மகசூல் ஈட்டலாம்,என்றார். தொடர்புக்கு 08903966576
நன்றி: தினமலர்