நுண்ணுயிர் உரங்கள்
நுண்ணுயிர் உரங்கள்
முன்னுரை
நீடித்து நிலைத்த வேளாண்மை உற்பத்தி மண்வளத்தை பெரிதும் சார்ந்துள்ளது. மண் வளப் பராமரிப்பு சரிவிகித அங்கக மற்றும் இராசயன கலவையினால் உறுதி செய்யப்படுகிறது. இராசயன உரங்களை அதிகம் பயன்படுத்துவதால் மண்ணிலுள்ள உயிரினங்கள் அழிகின்றன. இயற்கையிலேயே, மண்ணில் அநேக நன்மை தரும் நுண்ணுயிர்கள் உள்ளன, அவை மண்ணிலுள்ள சத்துக்களை கரைத்து தாவரங்கள் எளிதில் எடுத்துக் கொள்ளும் வகையில் அளிக்கின்றது. இவ்வகை நுண்ணுயிர்களை பெருக்கம் செய்து மண்ணில் நேரடியாகவோ கலப்பதால், மண்ணின் நுண்ணுயிர்களை அதிகரிக்கலாம். நுண்ணுயிர்களை ஆய்வுக்கூடத்தில் பெருக்கம் செய்து, அதை நிலத்தில் உபயோகிக்கும் வகையில் கலவைகளுடன் சேர்த்து கலவையே உயிர் உரங்களாகும்.
பாக்டீரியா, பூஞ்சாணம் மற்றும் பாசிகளிலிருந்து உயிர் உரங்கள் தயாரிக்கப்படுகின்றது. இவற்றில் செயல்பாடு ஒன்றிற்கொன்று மாறுபடும் ஆகையால் இவற்றை தனித்தனியாகவோ, கலவைகளாகவோ உபயோகிக்கலாம். முறையான ஆராய்ச்சியினால், திறன் வாய்ந்த இனங்களைக் கண்டறிந்து மண்ணிற்கும், காலச் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு உபயோகிக்கலாம். ஆய்வில் கண்டறிந்த இனங்களை, ஆய்வுக்கூடங்களில் இனவிருத்தி செய்து, விவசாயிகளுக்கு வினியோகிக்கலாம். இவ்வினங்களைத் தாங்கி எடுத்துச் செல்ல, இலை மக்கு மண் / தூள்கரி மண், நிலக்கரித் தூள், ஆகியவற்றுடன் கலந்து உபயோகிக்கும் போது நீண்ட இருப்புக் காலத்துடன் சேமித்து உபயோகிக்கலாம்.
இந்தியாவின் பொதுவாக பயன்படுத்தப்படும் உயிர் நுண்ணுயிர்களின் பட்டியல்.
வ.எண்
|
பெயர் |
தகுந்த பயிர்கள் |
நன்மைகள் |
குறிப்புகள் |
1. |
ரெசோமியம் |
பயிறுவகை பயிர்களான நிலக்கடலை, சோயா |
10-35 சதவிகிதம் விளைச்சல் அதிகரிப்பு, 50-200 கிலோ நைட்ரஜன் ஒரு எக்டருக்கு நிலை நிறுத்தும். |
தீவனப் பயிர்களுக்கு உகந்தது, மண்ணில் தழைச் சத்தை அதிகரிக்கிறது. |
2. |
அசிடோபேக்டர் |
பயறுவகை அல்லாதப் பயிர்களுக்கு மற்றும் வறண்ட நிலப் பயிர்களுக்கும் மண்ணில் இடுதல் |
10-15 சதவிகிதம் விளைச்சல் அதிகரிப்பு, 20-25 சதவிகிதம் நைட்ரஜன் ஒரு எக்டருக்கு |
சில நோய்களையும் கட்டுப்படுத்தும். |
3. |
அசோஸ்பைரில்லம் |
மக்காச்சோளம், பார்லி, ஓட்ஸ், சோளம், சிறு தானியம், கரும்பு, நெல் |
10-12 சதவிகிதம் விளைச்சல் அதிகரிப்பு |
வளர்ச்சி ஊக்கிகளின் உற்பத்தி அதிகரிக்கும், பயிறு வகைப் பயிர்களுடன் கூடுதல் பலன் பெறவும் உபயோகிக்கலாம். |
4. |
பாஸ்பரஸ் கரைக்கும் நுண்ணுயிரிகள் (இரண்டு வகை பாக்டீரியாக்களும், இரண்டு பூஞ்சாணங்களும் இதில் அடங்கும்) |
எல்லாப் பயிர்களுக்கும் மண்ணில் இடுதல் |
5-30 சதவிகிதம் விளைச்சல் அதிகரிப்பு |
பாறையிலிருந்து எடுக்கப்பட்ட பாஸ்பரசுடன் கலந்து உபயோகிக்கலாம். |
5. |
நீலப்பச்சை பாசி மற்றும் அசோலா |
நெல் / நன்செய் நிலங்கள் |
ஒரு எக்டருக்கு 20-30 கி தழைச்சத்து அசோலாவிலிருந்து ஒரு எக்டருக்கு 40-50 டன் எடையுள்ள அங்கக உயிர்ப் பொருள் மற்றும் 30-100 கி தழைச்சத்து. |
மண்ணின் உவர்ப்பு தன்மையைக் குறைக்கும். உபயோகிக்கலாம், வளர்ச்சி ஊக்கிகளை அதிகரிக்கும், தமழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், உயர் விளைச்சல் தரும் அசோலா வீரிய இரகங்களை உருவாக்கியுள்ளது. |
6. |
மைக்ரோ ரைஸா |
மரங்கள், பயிர்கள் மற்றும் அலங்காரச் செடிகள் |
30-50 சதவிகிதம் உயர் விளைச்சல், பாஸ்பரஸ் துத்துநாக, கந்தகம் மற்றும் நீர் உட்கொள்ளும் திறனை அதிகரிக்கும். |
நாற்றுக்களை பயன்படுத்தலாம். |
நுண்ணுயிர் உரங்களின் நன்மைகள்
நுண்ணுயிர் உரங்கள் சத்துக்களை செடிகள் எடுத்துக் கொள்ளும் வகையில் (தழைச்சத்து நிலை நிறுத்துவதினாலும், மண்ணில் உள்ள பாஸ்பரசை கரைத்தும்) செயல்படுகின்றது. மட்டுமல்லாது, பயிர் செழித்து வளரக்கூடிய வகையில் ஊக்குவித்து விளைச்சலை அதிகரிக்கின்றது. இம்முறையில் உயர்ப்புத் தன்மை / கலர்த்தன்மை, மண் அரிப்பு போன்ற பிரச்சனை இல்லாத இயற்கை முறையாகும். குறைந்த இடுபொருள் உபயோக வேளாண்மையிலும், எண்ணெய் வித்து உற்பத்தி மற்றும் கரும்பு உற்பத்தியிலும் இம்முறை நீடித்து நிலைத்த உற்பத்திக்கு மிகவும் உதவுகின்றது. அங்கக வேளாண்மையிலும், சுற்றுச்சூழலில் இராசயன பொருளின் அளவைக் குறைக்கவும், நுண்ணுயிர் உரங்களின் உற்பத்திக்கு அதிகக் கவனம் செலுத்தவேண்டும்.
வர்த்தக நோக்கம்
மாநில வேளாண் துறை நுண்ணுயிர் உரங்களை வாங்கி உழவர்களுக்கு குறைந்த விலையில் வினியோகிக்கின்றது. ஏக்கருக்கு 200-500 கிராம் நுண்ணுயிர்களை தாங்கிச் செல்லும் பொருட்கள் தேவைப்படுகின்றது. அவற்றின் விலை ரூ. 10-25 ஆகும். இவற்றினை கருத்தில் கொண்டு ஒரு ஸ்தாபனத்தை ஆரம்பித்தால் நல்ல வியாபாரம் செய்யலாம். நுண்ணுயிர் உரங்களில் திறன் இராசயன உரத்தைப் போல் வெளிப்படையாக தெரியாததினால், அநேக விவசாயிகள் இதன் முக்கியத்துவத்தை அறியாமலிருக்கின்றனர். மஹாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் சிலப் பகுதிகளில் மட்டும் இதன் நன்மையை அறிந்திருக்கின்றனர். இயற்கை வேளாண்மை மற்றும் இயற்கை இடுபொருளினைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினால், நுண்ணுயிர் உயரங்களும் நல்ல வரவேற்பு பெறும். மேலும் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் அதிக விலையாகிறது. தற்பொழுதுள்ள உற்பத்தி நிலையங்களிலிருந்து சுமார் ஓர் ஆண்டில் 9000 டன் உற்பத்தி செய்யப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. தேசிய உயிர் உரங்கள் மேம்பாட்டு மையத்தின் காசியா கணிப்பின்படி இதன் அளவுத் தேவையை (2000-01ல் 7.6 டன்) விட மிகவும் குறைவாக உள்ளது. வேளாண்மை அமைச்சகம், இது வரை 67 நுண்ணுயிர் உர உற்பத்தி நிலையங்கள் உதவி செய்துள்ளது.
நன்றி
தவேப வேளாண் இணைய தளம்