இயற்கை உயிரிப் பூச்சிக்கொல்லி
முன்னுரை
வேளாண் பயிர்களில் அதிக உற்பத்திப் பெறுதலை தடுக்கும் காரணிகளில் பூச்சிகளின் தாக்குதலும் ஓர் முக்கியக் காரணமாகும். ஒவ்வொரு வருடமும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலினால் சுமார் 30 சதவிகிதம் பயிர் பாதிப்படைகிறது. இப்பாதிப்பினால், சுமார் ரூ. 60000 நஷ்டம் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படுவதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. பயிர் பாதுகாப்பில், உயிர்ப் பூச்சிக்கொல்லி உபயோகிப்பதினால் இம்மாதிரியான இழப்பினை வெகுவாக குறைக்கலாம். பூச்சிகளின் எண்ணிக்கை பொருளாதார சேதநிலையை தாண்டும் போது மட்டும் பூச்சிக் கொல்லி உபயோகிக்கலாம். ஆனால், தேவைக்கு அதிகமாகவோ, அறிவியல் பூர்வமுல்லது உபயோகிப்பதினால், பூச்சிகளின் எதிர்ப்புத்திறன், பெருக்கம், சுற்றுச்சூழல் பாதிப்பு, உணவுப் பாதுகாப்பில் அபாயம் ஆகிய பிரச்சனைகள் ஏற்படுகின்றது.
பூச்சிகளின் தாக்குதல் எல்லாப் பயிர்களிலும் காணப்படும். அதிலும் குறிப்பாக பணப்பயிர்களிலும் பாதிப்பு கடுமையாக இருக்கும். கடந்த 3-4 பத்தாண்டுகளில் தீவிர பயிர்ச் சாகுபடியின் அறிமுகத்தால் பூச்சிக் கொல்லியின் உபயோகமும் அதிகரித்துள்ளது. இந்தியாவின் சராசரி பூச்சிக்கொல்லியின் உபயோகம் சுமார் எக்டருக்கு 570 கிராமாகும். இது வளர்ச்சிப் பெற்ற நாடுகளான ஜப்பான், தாய்லாந்து மற்றும் ஜெர்மனியின் உபயோக அளவுகளை (11கி, 17கி, 3 கி) காட்டிலும் குறைவாகும். இருந்த போதிலும், இதன் உபயோகத்தினால் வரும் விளைவுகள் அபாயகரமாக உள்ளது.
அதிக பூச்சிக்கொல்லி உபயோகத்தினால், நீர், மண் மற்றும் காற்று மாசுப்படுவதோடு, பிற நன்மை தரும் உயிரினங்களான மகரந்தச்சேர்க்கை செய்யும் பூச்சிகள், ஒட்டுண்ணிகள், இரை விழுங்கிகள், வனவிலங்குகளும் பாதிக்கப்படுகின்றன. இதன் காரணமாக சுற்றுச்சூழல் சமநிலை பாதிப்படைந்து பூச்சிகளின் பெருக்கம் உருவாகுதல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுதல் ஆகிய எதிர் மறை விளைவுகளை ஏற்படுத்துகின்றது. மேலும் விவசாயிகளின் பயிர் உற்பத்திச் செலவினை அதிகரித்து வருமானமும் குறைக்கின்றது.
இராசயன பூச்சிக்கொல்லிகளின் உபயோகத்தால் ஏற்படும் பல்வேறு விதமான இடர்பாடுகளினால், அதன் உபயோகத்தை குறைத்து பூச்சிக்களை கட்டுப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இராசயன பூச்சிக் கொல்லி உபயோகத்தால் சுற்றுச்சூழலில் ஏற்படும் சுகாதார கேடு மற்றும் விவசாயிகளில் பயிர்ச் சாகுபடியில் செலவு அதிகரிப்பு / குறைந்த வரவு ஆகியவை ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மைக்கு வழிவகுத்துள்ளது. ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை என்பது ஒன்றிற்கு மேற்பட்ட முறைகளைக் கையாண்டு இராசயனப் பொருட்களை இணக்கமாக உபயோகித்து பூச்சிக் கட்டுப்பாடு செய்வதாகும். சுருக்கமாக சொன்னால், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை (ஐபிஎம்) என்பது கைவினைமுறை, உயிரி முறை மற்றும் இராசயன முறைகளை சரியாகப் பிணைந்து திறன்பட சுற்றுச்சூழல் பாதிப்பில்லாமல், அதே சமயம் சமுதாயத்தின் ஏற்புடைய முறையில் கையாண்டு நோய், களை மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதாகும். ஐபிஎம்ன் முக்கியக்கூறுகள், வருமுன் காப்பு, கண்காணிப்பு மற்றும் செயல்பாடு ஆகும். ஐபிஎம் அண்மையில் காலங்களில் கட்டுப்படுத்த முடியாத அநேக பூச்சிகளுக்கு முடிவுகளான ஒரே பதிலாகும். இந்த ஐபிஎம்மின் வெற்றிக்கு பெரிதும் உதவுவது உயிரி கட்டுப்பாட்டு முறையாகும்.
உயிரிப் பூச்சிக்கொல்லிகளின் முக்கியத்துவம்
இயற்கையிலேயே ஒவ்வொரு சுற்றுச்சூழல் அமைப்பிற்கும் ஒரு சமநிலை உண்டு 7 வளர்ச்சியும் அதன் பெருக்கமும் (ஒவ்வொரு உயிரினத்தின்) உணவுச் சங்கிலி அதன் இரை விழுங்கி மற்றும் ஒட்டுண்ணி போன்றவற்றினைப் பொருத்தே அமையும். உயிரிக் கட்டுப்பாட்டு முறையில், இதன் தொடர்பினை உபயோகித்து மேற்கொள்ளப்படுகின்றது. ஒரு பூச்சியின் இயற்கை எதிரியினைக் கண்டறிந்து, அதன் உயிரியல் தன்மையைப் படித்து, இனப்பெருக்கம் செய்து, அமையே குறிக்கப்பட்ட பூச்சியினை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. இவ்வகைப் பொருட்கள் மிகவும் குறிப்பிட்ட பூச்சியினை மட்டுமே அழிக்கும். பிறகு அதன் உணவு தீர்ந்தவுடன் அழிந்துவிடும். ஆகவே இவை இயற்கை விதிமுறையின் அடிப்படையில் சுற்றுச்சூழல் மாசுபடாமல், பாதுகாப்பான மற்றும் குறைந்த செலவாகும் முறையாகும்.
உயிரிப் பூச்சிக்கொல்லிகளென்பது, பயிரைத் தாக்கும் பூச்சிகளின் வாழ்வியல் இடைப்பட்டு பயிர்த்தாக்குதலை வெகுவாக குறைக்கும் உயிர் இனங்களாகும். உயிரிப் பூச்சிக்கொல்லிகளாக உபயோகிக்கப்படும் சாதனங்களாவன, ஒட்டுண்ணிகள், இரை விழுங்கிகள், நோய் உருவாக்கும் காரணிகளான, பூஞ்சாணம், பாக்டீரியா மற்றும் வைரஸ். மேலும் இவை மற்ற முறை பூச்சிக் கட்டுப்பாட்டிற்கும் உதவுகின்றது. இயற்கையில் இருக்கும், காரணிகள உபயோகிப்பதே சிறந்த உயிரிப் பூச்சிக் கட்டுப்பாட்டுக்கும் அதே சமயத்தில் இக்காரணிகளை ஆய்வுக்கூடத்தில் பாதுகாத்து, பராமரித்து பெருக்கம் செய்து விளைநிலங்களில் விடலாம். அதன் பிறகு, அப்பூச்சிகளன் விலை நிலங்களின் தானாக பெருகி போதிய அளவு வந்தவுடன் பூச்சிக் கட்டுப்பாட்டினைப் பொருளாதார சேத நிலையின் கீழ்க்கொண்டு வரவல்லது. இவற்றின் வெற்றி, அதன் பெருக்காகும் திறனையும், உபயோகப்படுத்தும் காலத்தையும் பொருத்தது.
உயிரிப்பூச்சிக்கொல்லிகளின் நன்மைகள்
இராசயன பூச்சிக்கொல்லிகளை விட உயிரிப் பூச்சிக்கொல்லிகள் உபயோகிப்பிற்கான காரணங்கள்.
- நச்சுத்தன்மையில்லாதது.
- குறிப்பிட்ட உயிரினத்தை மட்டும் தாக்கி, நன்மை தரும் பூச்சிகளை, மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பூச்சிகள், இரை விழுங்கி, ஒட்டுண்ணிகளை பாதுகாக்கும்.
- பூச்சிகளின் இயற்கை எதிரிகள் பாதிக்கப்படாமல் அதிகரித்து, இராசயன பூச்சிக்கொல்லியின் உபயோகத்தை குறைக்கிறது.
- சுற்றுச்சூழலுக்கு ஏற்றது
- குறைந்த செலவு
- ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையில், முதல் மற்றும் இரண்டாம் நிலையின் முக்கியக் கூறுகளாகும்.
இந்தியாவில், உயிரிப்பூச்சிக்கொல்லியின் உபயோகத்தின் நிலை
கடந்த 10 ஆண்டுகளில் உயிரிப் பூச்சிக்கொல்லி உபயோகத்தினால் அநேக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது, குறிப்பாக, டிரைக்கோடெர்மா, டிரைக்கோகிரம்மா, என்பிவி அதிகரித்துள்ளது.
இந்தியாவில் அநேக இடங்களில் உயிரிப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தியுள்ளனர். அவற்றுன் சில.
- உண்ணிச்செடியினைக் கட்டுப்படுத்த டீலோநீமா என்றப் பூச்சியை பயன்படுத்தினர்.
- கரும்பில் பைரில்லாவை கட்டுப்படுத்த,எப்பிகார்நியா மெலனோலுக்கா மற்றும் டெட்ராஸ்டிக்டஸ் பைரில்லா ஆகிய இயற்கை எதிரிகளை உபயோகித்து வெற்றிக் கண்டனர்.
- டிரைக்கோகிரம்மா, கரும்பு துளைப்பானின் முட்டை ஒட்டுண்ணியை பயன்படுத்தி, தமிழ்நாடு, ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், பீகார் மற்றும் ஹரியானா மாநிலங்களில் வெற்றிக் கண்டுள்ளனர்.
- பருத்திக் காய்ப்புழுவை கட்டுப்படுத்த, டிரைக்கோ கிரம்மா, பிரகான், கைலோனிஸ் மற்றும் கிரைசோபாவையும், நெல்லில் தண்டு துளைப்பான் மற்றும் இலைச்சுருட்டுப் புழுவை கட்டுப்படுத்த டிரைக்கோகிரம்மாவையும் பயன்படுத்தப்படுகிறது.
- கரும்பில் செதில் பூச்சியைக் கட்டுப்படுத்த, காக்சிநெல்லிட் வண்டினை, உத்திரப்பிரதேசம், மேற்கு வங்காளம், அண்மைக் காலங்களில், உயிரிப் பூச்சிக்கொல்லி பிரபலமடைந்து வருகின்றது. இவ்வகைப் பூச்சிக்கொல்லிகள், அதிக அளவு உற்பத்தி செய்தல், சேமித்தல், போக்குவரத்து சேவை மற்றும் உபயோகிக்கும் முறை ஆகியவற்றின் புதிய தொழில்நுட்பங்களில் மேம்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
பூச்சிக்கொல்லியின் வர்த்தக ரீதியான உற்பத்திக்கான வாய்ப்புகள்
இந்தியாவில் மொத்தம் 140 உற்பத்தி மையங்கள் இருந்து போதிலும், அதன் உற்பத்தித் திறனை சுமார் ஒரு சதவிகித நிலத்திற்கு மட்டுமே உபயோகிக்க முடியும். இதனால் உற்பத்திக்கும், தேவைக்குமிடையே அதிக இடைவெளி நிலவுகின்றது. எனவே, பெரிய அளவில் முதலீடு செய்து தனியார் நிறுவனங்களின் பங்கை அதிகரிக்கவேண்டும்.
டிரைக்கோடெர்மா சில உள்ளூர் சிறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி வருகின்றது. டிரைக்கோடெர்மா விரிடி (பூஞ்சாண நோய்க் கட்டுப்படுத்த) மற்றும் டிரைக்கோகிரம்மா (கரும்பில் தண்டுத் துளைப்பானைக் கட்டுப்படுத்த) ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் தேவையை சந்திக்க, உற்பத்திய அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
உயிரிப் பூச்சிக்கொல்லி உற்பத்தி மையம் அமைக்க இருப்பிடம்
வெற்றிகரமான மையம் அமைக்க, நல்ல சீரோஷ்ண நிலையுள்ள இடங்களில் ஆரம்பிக்க வேண்டும். உயிரிப் பூச்சிக்கொல்லிகள் தயாரிக்க கட்டுப்பாடான சூழ்நிலைத் தேவை. இதனுடன் சந்தைப்படுத்தும் வாய்ப்புள்ள இடங்களைப் பார்த்து தேர்ந்தெடுக்கவேண்டும். அதே சமயம், உற்பத்தி மையங்கள், கால் மயில் தூரம் விளை நிலங்களிலிருந்து தள்ளி அமைக்கவேண்டும். காற்றிலுள்ள மாசுப் பொருட்களும், உயிரிப் பூச்சிக்கொல்லி உற்பத்தியை பாதிப்பதால், தொழிற்சாலைகள் மற்றும் நகர்ப்புறங்களிலிருந்து தூரமாக அமைக்கவேண்டும்.
தொழில்நுட்பம்
மாதிரி
|
உயிரி-காரணி |
உற்பத்தி செயல்முறை |
குறிப்புகள் |
1. |
டிரைக்கோடெர்மா (முட்டை ஒட்டுண்ணி) | சேமிப்புத் தானியப் பூச்சியினை வைத்து இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. இதில் சோளம் தானியத்திலுள்ள பூச்சியினை வைத்து டிரைக்கோகிரம்மா ஒட்டுண்ணியை பெருக்கம் செய்யப்படுகிறது. பிறகு முட்டைகளை அட்டையில் ஒட்டி “டிரைக்கோ அட்டை” வினியோகப்படுகிறது. | கரும்பு தண்டு துளைப்பான், பருத்து காய்ப்புழு மற்றும் சோளம் தண்டு துளைப்பான் ஆகியவற்றை கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. |
2. |
கிரைசோபா கார்நியா (கிரைசோபிட் இரை விழுங்கி) | சேமிப்பு தானியப் பூச்சிகளை உபயோகித்து ஆய்வகத்தில் இனப்பெருக்கம் செய்யலாம். | காய்கறி / பழம் மற்றும் பயறுவகைப் பயிர்களிலுள்ள புழுக்களை கட்டுப்படுத்தும். |
3. |
பொறி வண்டு | பூசணிக்காயிலிருந்து பெருக்கம் செய்யப்பட்ட மாவுப் பூச்சியினை உபயோகித்து இனப்பெருக்கம் செய்தல் | மாவுப் பூச்சி கட்டுப்பாடு |
4. |
என்பிவி ஹெலிக்கோவெர்ப்பா மற்றும் ஆர்மிஜிரா ஸ்போடாப்டிரா லிட்டுரா |
செயற்கை உணவுப் பயன்படுத்தி, காய்ப்புழு மற்றும் புகையிலைப் புழுவை உற்பத்தி செய்தல், என்பி வைரஸ்ஸை செய்த புழுக்களின் மீது தடவி, வைரசை அதிகரிக்கச் செய்தல். பின்பு வைரஸ் புழுக்களிலிருந்து பிழிந்து வடிகட்டி பிரித்தெடுத்தல். |
பருத்து காய்ப்புழு மற்றும் மற்ற காய்புழுக்களை கட்டுப்படுத்த பயன்படுத்தலாம் |
டிரைக்கோடெர்மா பூஞ்சாணம் |
ஆய்வுக்கூடத்தில் உற்பத்தி செய்து, தூளுடன் கலந்து பயன்படுத்தப்படுகிறது. | பயறுவகைப் பயிர்களில் சேர் அழுகல் மற்றும் வாடல் நோய் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. | |
கவர்ச்சி ஊக்கிகள் | இனக்கவர்ச்சி ஊக்கிகள் நெகிழிப் பொறிகளில் வைத்தல் | காய்ப்புழு மற்றும் புகையிலைப் புழுக்களின் ஆண் பூச்சிகளை கவர்ந்திழுத்தல். |
மேற்கூறிய தொழில்நுட்பங்கள் யாவும் பாரம்பரிய முறையிலானவை, இவை ICAR, நிறுவனமும், மாநில வேளாண் பல்கலைக்கழகங்களும், சில உற்பத்தி முறைகளை நிர்ணயம் செய்துள்ளது.
உயிரிப்பூச்சிக்கொல்லி மாதிரியின் முக்கிய நோக்கங்கள்
- உயிரிப் பூச்சிக்கொல்லி மாதிரியின் பிரதான நோக்கம் என்னவெனில் மேலே குறிப்பிட்டுள்ள உயிரிக் காரணிகளை, அதிக அளவில் உற்பத்தி செய்தல்.
- உயிரிக்கட்டுப்பாடு மையம் துவங்க விருப்பமுள்ளவர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும், பண உதவி செய்யவும்.
- அதிக உயிரிக் கட்டுப்பாட்டு உற்பத்தி நிலையங்கள் உருவாக்க ஊக்குவித்தல்.
- தொழில்நுட்பங்களை பரவச் செய்தல்.
உயிரிப் பூச்சிக் கட்டுப்பாட்டு மையம் அமைக்க அடிப்படைத் தேவைகள்
1. நிலம்
பூச்சிகளை வளர்க்கும் அறை, ஆய்வுக் கூடம் மற்றும் அலுவலகம் அமைக்க நிலம் தேவைப்படுகிறது. இங்கு குறிப்பிட்டுள்ள மாதிரியில் வாடகை கட்டிடங்களே குறிப்பிட்டுள்ளபடியால், நிலத்தின் செலவு சேர்க்கப்படவில்லை.
2.கட்டிடம் மற்றும் கட்டிட வேலைகள்
உயிரிப்பூச்சிக்கொல்லி உற்பத்தியில் பூச்சிகளே வளர்க்கப்படுகின்றன. ஆகையால், அடிப்படை உள்கட்டமைப்புகள், எவ்வித மாசும் இல்லாமல் சுற்றுச்சூழல் தூய்மையாக இருக்கவேண்டும். மையங்கள், தொழிற்சாலைகளின் அருகிலே அமைக்கக்கூடாது. மாதிரி Iக்குத் தேவையான இடஅளவு 1000 சதுர அடி மாதிரி IIற்கும், 2400 சதுர அடித் தேவைப்படும். மின்சாரம், நீர் மற்றும் போக்குவரத்து வாகனம் ஆகியவை பிறத் தேவைகளாகும். இவற்றுடன் சேர்ந்து, உணவுத் தயாரிப்பு, கார்சிரா உற்பத்தி, முட்டை உற்பத்தி மற்றும் வளர்ப்பு முறை உற்பத்தி ஆகியவற்றிற்காக தனித்தனி அறைகள் தேவைப்படும். என்பி வைரஸ் உற்பத்தி அறை மட்டும் அதிக சுகாதாரத்தோடு சற்று தூரத்தில் மாசுபடாதவாறு அமைக்கவேண்டும்.
3.உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள்
அலமாரி மற்றும் நெகிழி தட்டுப் போன்ற சாதனங்கள் பூச்சி வளர்ப்பிற்கு தேவைப்படுகின்றது. இதைத் தவிர இயந்திரம் மற்றும் பிற உபகரணங்களும், பூச்சியைச் சேகரிக்கவும், வளர்க்கவும் தேவைப்படுகிறது. டிரைக்கோடெர்மாவை உற்பத்தி செய்ய, லாமினார் ஃபலோ என்றக் கருவி காணப்படும்.
4. மூலப்பொருட்கள்
பூச்சி உற்பத்திக்கு (மூலப்பொருட்களாவன) தேவைப்படும், அவையாவன பயறுவகைப் பயறுகள், விட்டமின்கள், எதிர்ப்புச் சக்தி பொருட்கள் டிரைக்கோடெர்மா தயாரிப்பிற்கு, கரும்புச் சக்கை மற்றும் ஈஸ்ட் ஊடகம் தேவைப்படுகிறது. இவையாவும் உள்ளூரிலேயே கிடைக்கக்கூடியவை.
5. தண்ணீர்
பூச்சி உற்பத்திக்காக, உணவுத் தயாரிப்பிலும் சுத்தம் செய்ய, கழுவ மற்றும் குடிப்பதற்காக, தேவைப்படுகிறது. உபயோகிக்கும் முன் நீரின் தரத்தினை பரிசோதித்து உபயோகிக்கவேண்டும்.
6. மின்ஆற்றல்
உயிரிப் பூச்சிக்கொல்லி உபயோகத்திற்கு மின்சாரம் அவசியமாகும்.
7. மனிதஆற்றல்
பயிற்சிப் பெற்ற திறமையான வேலையாட்கள் மிக அவசியம். ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும், வெவ்வேறு எண்ணிக்கையிலான ஆட்கள் தேவை.
வ. எண்
|
விவரம் |
மாதிரி 1 |
மாதிரி 2 |
1. | தொழில்நுட்ப வல்லுநர் |
1 |
3 |
2. | பயிற்சிப்பெற்றவர் |
2 |
5 |
3. | திறமையான தொழிலாளி |
3 |
10 |
மொத்தம் |
6 |
18 |
உற்பத்தி அளவு
உயிரிப் பூச்சிக்கொல்லி உற்பத்தி பெரு / சிறு தொழில் மூலம் உற்பத்தி செய்யலாம். சிறு தொழில் உற்பத்திக்கு கிராமப்புற மற்றும் சமுதாய கூட்டுறவு மூலம் செய்து உள்ளூர் தேவைகளைப் பூர்த்தி செய்யலாம். உயிரிப் பூச்சிக்கொல்லி உற்பத்தி செய்யும் முறை மிகவும் எளிதானதால் விவசாயிகள் / சுய உதவிக்குழுக்கள் பயிற்சிக்குப் பெற்று உற்பத்திச் செய்யலாம். நிறுவனங்கள், கரும்பு ஆலைகள், கூட்டுறவுகள் (வேளாண் இடுபொருட்கள் உற்பத்தி செய்யும்) நடுத்தர மற்றும் பெரிய அளவில் உற்பத்தி செய்து வினியோகிக்ககலாம். உதாரணமாக தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் வணிக வளம் கொண்ட உரத்தொழிற்சாலைகள், பெரிய அளவில் உயிரிப் பூச்சிக்கொல்லிகள் உற்பத்தி செய்யலாம். அது போல், விதை உற்பத்தி நிறுவனங்கள் டிரைக்கோ டெர்மா உற்பத்தி செய்து வினியோகிக்க சிறந்ததாகும்.
வணிக வளம் / வாய்ப்புகள்
அளவுக்கதிகமாக பூச்சிக்கொல்லி உபயோகத்தால் ஏற்பட்ட விளைவுகளும், அங்கக வேளாண்மையின் முக்கியத்துவமும் நீடித்து நிலைத்த வேளாண்மையின் வளர்ச்சியினாலும், உயிரிப் பூச்சிக்கொல்லியின் உற்பத்தி நிறுவனத்திற்கு நல்ல வாய்ப்பளிக்கின்றது. குறிப்பாக, மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில், கரும்பு, துவரை, தானியப் பயிர்கள் மற்றும் காய்கறிப் பயிர்கள் சாகுபடியில் பெரிதும் உபயோகிக்கப்படுகின்றது.
தேசிய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை கருத்தரங்கு, 1992 ஆம் ஆண்டு சில உயிரிப்பூச்சிக்கொல்லியின் தேவையை கணக்கீடு செய்துள்ளது. அவையாவன.
வ.எண் | உயிரிப்பூச்சிக்கொல்லி | தேவை |
1. | டிரைக்கோகிரம்மா | 690 மில்லியன் அட்டைகள் |
2. | ஹிலியோதிஸ் NPV | 5293 மில்லியன் LE |
3. | ஸ்போடாப்டிரா NPV | 3729 மில்லியன் LE |
4. | டிரைக்கோடெர்மா | 2280 MT |
தற்பொழுது, அரசுத்துறை, தனியார் நிறவனங்களிடமிருந்து கொள்முதல் செய்து, ஒரு சில விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கி வருகின்றது.
ஒழுங்குமுறை நடவடிக்கைகள்
உயிரிப்பூச்சிக் கொல்லி காரணிகள் யாவும், உயிரினங்களாதலால், அவற்றை தகுந்த கட்டுப்பாட்டு முறைகளுடன் கையாளவேண்டும். அரசாங்கமும், தரக்கட்டுப்பாடு விதிமுறைகளை கவனத்துடன் அமுல் செய்யவேண்டும். இதன் தொடர்பாக, பயிர் பாதுகாப்பிற்கான கட்டுப்பாடு மற்றும் சேமிப்பு இயக்ககம், வேளாண்மை மற்றும் கூட்டுறவுத் துறை, வேளாண் அமைச்சகம், இந்திய அரசாங்கம், உயிரிப்பூச்சிக்கொல்லியைப் பதிவு செய்ய சில விதிமுறைகளும் / தேவையான ஆவணங்களின் வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. இதன்படி, எல்லா மையங்களும், இந்தியத் தரம் மற்றம் தொழில்நுட்ப குறிப்புக்களை பூச்சிக்கொல்லிச் சட்டம், 1968ன் கீழ் பதிவு செய்ய பூர்த்தி செய்யவல்லதாக இருக்கவேண்டும்.
உயிரிப்பூச்சிக்கொல்லி பதிவு செய்தல்
தற்பொழுது, பேசில்லஸ் துரின்சியன்சிஸ், வேம்பு சார்ந்த கலவைகள், நுண்ணுயிரிப் பூச்சிக்கொல்லிகளான பூஞ்சாணம் மற்றும் NPV போன்றவை பூச்சிக்கொல்லி சட்டம், 1968ன் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இது உயிரிப் பூச்சிக்கொல்லியின் தரத்தினை விவசாயிகளின் உபயோகத்தில் உறுதி செய்கிறது. தர வழியலகு, இறுதி தஸ்தாவேஜில் குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள் கொண்ட குறிப்புப் பத்திரம், பதிவு செய்வதற்கான வழிமுறைகறை தயார் செய்து அந்தந்த தொழில் முனைவோர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யாமல் உயிரிப்பூச்சிக்கொல்லி உற்பத்தி செய்தல் சட்டப்படி குற்றமாகும்.
உயிரிப் பூச்சிக்கொல்லியின் தொழில்நுட்பங்கள்
உயிரிப் பூச்சிக்கொல்லிகள்
உயிரிப் பூச்சிக்கொல்லிகள் என்பது, பயிர்ச் சேதம் அடையாதவாறு, பயிர்த்தாக்கம் பூச்சிகளின் வாழ்வியல் சுழற்சியில் பாதிப்பேற்படுத்தி பயிர் சேதத்தை குறைக்கும் உயிரினங்களாகும். பூச்சிகளின் இயற்கை எதிரிகளான ஒட்டுண்ணி, இரை விழுங்கி, பூஞ்சாணம், பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற உயிரினங்களே உயிரிப் பூச்சிக்கொல்லிக் காரணிகளாகும். இக்காரணிகள், பாதுகாத்து, பராமரித்து ஆய்வுக்கூடத்தில் இனவிருத்தி செய்து நிலத்தில் உபயோகிக்கலாம்.
உயிரிப்பூச்சிக் கொல்லிகள் பட்டியல்
வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படும் உயிரிப் பூச்சிக்கொல்லிகளில் பலவிதக் காரணிகள் உள்ளன.
அவையாவன.
ஒட்டுண்ணிகள் | இரை விழுங்கிகள் | பூச்சியைத் தாக்கும் கிருமிகள் |
டிரைக்கோகிரம்மா கைலோநிஸ் டி பிரேசிலியன்சிஸ் டி பிரிட்டியேசம், தக்காளி பழத் துளைப்பான் | க்ரைசோப்பா இனம் வெள்ளை ஈ அசுவினி போன்றவற்றை கட்டுப்படுத்தலாம். | பாக்டீரியா பேசில்லஸ் லெப்பிடாப்டிரன் இனத்தை அழிக்க |
டி கைலோனிஸ் கத்தரி தண்டு மற்றும் காய்த் துளைப்பான், பருத்திக் காய்த்துளைப்பான் கரும்பு, நெல். | நூற்புழு, மண்வழி வரும் புழு, லைப்பிடாப்டிரன் மற்றும் இலைப்பூச்சிகள். | பூஞ்சாணம் டி விரிடி மற்றும் டி ஹசாரியம் மண்வழிப் பரவும் பூஞ்சாண நோயைக் கட்டுப்படுத்தலாம். |
நிலத்தின் உயிரிப் பூச்சிக்கொல்லியின் திறன்
மாநில வேளாண் பல்கலைக்கழகங்களும், ICAR ஆராய்ச்சி நிறுவனங்கள் / நிலையங்கள், உயிரிப்பூச்சிக்கொல்லியின் திறன் மற்றும் உபயோகிக்கும் அளவினைக் கண்டறிய பல சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
உயிரிக் காரணிகள் | பூச்சிக்கட்டுப்படுத்தும் திறன் |
டிரைக்கோடெர்மா | 60-90 % |
கிரிப்டோலேமஸ் | 100 % |
NPV | 70-80% |
டிரைக்கோடெர்மா விரிடி | 60-90% |
சிற்நத உயிரிக்கட்டுப்பாட்டுக் காரணிகளனி் தேவையான பண்புகள்
- நோய்க் காரணிகள் எதிர்ப்புத் திறன் உருவாகும் முன் பரவுகள்.
- நோய்த்தாக்கம் ஏற்படும் காலங்களின் பயிர்ப் பாதுகாப்பு செய்யும் வரை நிலைத்திருக்கும் தன்மை
- மாறுபட்ட மண் மற்றும் தட்பவெப்ப சுற்றுச்சூழலில் நிலைத்து நின்று, செயல்படக்கூடிய தன்மை.
- செயல்படும் விதம், ஒவ்வொரு நோய்க்காரணிகள், இரசாயனத் தன்மை மற்றும் கொல்லும் விதம் மாறுபடும்.
- இயற்கை எதிரிகளை உபயோகிக்கும் போது வேகமாகப் பரவி எளிதில் பூச்சிக்கொல்லிகளை அழிக்க உதவும்.
உயிரிப் பூச்சிக்கொல்லிக் காரணிகள் உற்பத்தி செய்ய தொழில்நுட்ப ஆலோசனைகள்
பூஞ்சாணம், பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்றவற்றை வைத்து உயிரிப் பூச்சிக்கொல்லிகள் உற்பத்தி செய்ய சிறந்த தொழில்நுட்பங்கள் அவசியமாகும். பெரிய அளவில் உற்பத்தி செய்ய திறமை வாய்ந்த ஆட்கள் தேவை. இவ்வாறு அறிவியல் பூர்வமான நிலையம் அமைக்க கீழ்க்கண்ட ஆலோசனைகளிலிருந்து, ஆலோசனையும் பயிற்சியும் பெறலாம்.
- திட்ட இயக்ககம், உயிரிக்கட்டுப்பாடு, ICAR, பெங்களூரு.
- இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம், பெங்களூரு.
- மத்திய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மையம் (CIPMC) பெங்களூரு.
- மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனம், (CICR) நாக்பூர்.
உற்பத்தி தொழில்நுட்பங்கள்
1.டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணி
முன்னுரை
டிரைக்கோடெர்மா இனம் முட்டை ஒட்டுண்ணி வகையைச் சார்ந்த உயிரிப் பூச்சிக்கொல்லியாகும். இவை உலகில் பருத்திக் காய்ப்புழு, கரும்பில் தண்டுத் துளைப்பான், பழம் மற்றும் காய்கறிகளில் காய்த்துளைப்பான்களை கட்டுப்படுத்த பரவலாக உபயோகப்படுத்தப்படுகிறது. டிரைக்கோகிரம்மா, முட்டையைத் தாக்கி அழிப்பதால், புழுக்களின் தாக்குதல் தவிர்க்கப்படுகின்றது. பூச்சிக்கொல்லி உபயோகிப்பதை விட குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடும், கிடைக்கிறது. இந்தியாவில், இரண்டு இனங்கள் அதாவது டி.கைலோனிஸ் மற்றும் டி, ஆப்போனிக்கம் ஆகியவை அதிகம் உபயோகிக்கப்படுகிறது.
டிரைக்கோகிரம்மா என்பது குறு குளவி, இதில் பெண் குளவி 20-40 முட்டைகளை, மற்றப் பூச்சிகளின் முட்டைகளின் மேல் இடும். இதன் வாழ்நாள் 8-12 நாட்களுக்குள் முடிந்துவிடும். சிறு குளவிகள் பிறப் பூச்சிகளின் முட்டையினுள் முட்டையிடுவதால், 3-4 நாட்களுக்குள், அதன் முட்டை கருப்பாக மாறிவிடும். டிரைக்கோகிரம்மாவின் முட்டையிலிருந்து வெளி வரும் புழுக்கள் மற்றப் பூச்சி முட்டையின் கருவை உண்டு வளர்ந்து முதிர்ந்த குளவிகள் அம்முட்டையிலிருந்து வெளிவரும்.
ஒரு டிரைக்கோகிரம்மா விருத்தியடையும் போது, குறைந்தபட்சம் 100 முட்டைகளை அழிக்கக்கூடியது.
2.தேவையான கருவிகள்
கார்சிரா வளாக்கக்கூடுகள், தட்டு, இரும்பு அலமாரி, வெப்பக்காற்று சூட்டெடுப்பு, காற்று குளிர்விப்பான், புற ஊதாக்கருவி, முட்டை அடைகாத்து குஞ்சு பொரிக்கும் பெட்டி, பெருக்கப்பெட்டி, அரவை இயந்திரம், இனச்சேர்க்கை அறை, ஜாடிகள், குளிர்ச்சாதனப்பெட்டி, கம்பி வளைகள் போன்றவை கார்சிரா வளர்ப்பிற்கும், டிரைக்கோடெர்மா உற்பத்திக்கும் தேவைப்படும்.
3.உற்பத்தி செய்ய வழிமுறைகள்
1. ஓம்புயிரியை தெரிந்தெடுத்தல்
டிரைக்கோகிரம்மா அபிவிருத்தி செய்ய, சரியான ஓம்புயிரியை தெரிந்தெடுத்தல் மிகவும் அவசியமாகும், நல்ல ஓம்புயிரியின் பண்புகளாவன.
டிரைக்கோகிரம்மா அபிவிருத்தி செய்ய, சரியான ஓம்புயிரியை தெரிந்தெடுத்தல் மிகவும் அவசியமாகும், நல்ல ஓம்புயிரியின் பண்புகளாவன.
- எளிதில் கிடைக்கக்கூடியவை
- உள்ளூரில் கிடைக்கக்கூடிய பொருட்களை உபயோகித்து இனப்பெருக்கம் செய்யக்கூடியவை
- அதிக மகசூல் தரக்கூடியவைகள்.
இந்தியாவில், கார்சிரா செபலோனிகா என்ற சேமிப்புத் தானியங்களில் வரும் ஓம்புயிரியைக்கொண்டு, அதிக அளவில் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது.
ஓம்புயிரையை வளர்த்தல் ஓம்புயிரி வளர்ப்பு சாதனங்கள், நச்சுத்தன்மையற்ற, மலிவு விலையிலானவைகளாக இருக்கும் போது இனச்சேர்க்கை அதிகரிப்பு, ஓம்புயிரியை கண்டறிந்து வளர்க்கவும்.
நன்றி
தவேப வேளாண் இணைய தளம்