இயற்கை முறையில் நெற்பயிரில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை
இயற்கை முறையில் நெற்பயிரில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை செய்வது பற்றி தெரிந்துகொள்வோமா?
சூடோமோனாஸ் எதிர் உயிரி பாக்டீரியாவை நெல்லுடன் விதைநேர்த்தி செய்யனும் அதாவது 1 கிலோ விதைக்கு 10 கிராம் வீதத்தில் உலர் விதை நேர்த்தி செய்யனும், இரண்டாவதாக நாற்றங்காலில் இடனும், அதாவது நெல் நாற்றுகளை பறிப்பதற்கு 1 நாள் முன்பு 8 செண்ட் நாற்றங்காலுக்கு 1 கிலோ வீதத்தில் நாற்றங்காலில் இடனும் மேலும் நடவு நட்ட வயலில் இடனும், அதாவது நடவு நட்ட பின் 20-30 நாட்களில் 1 எக்கருக்கு 1 கிலோ வீதம் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து இடவேண்டுகம்.
இனக்கவர்ச்சிப்பொறி மூலம் குருத்துப்பூச்சிகள் மற்றும் அந்துப்பூச்சி நடமாட்டத்தை கண் காணித்தல் மற்றும் கவர்தழித்தல் பற்றி தெரிந்துகொள்வோமா?
நடவு நட்ட 25-ம் நாள் முதல் இனக்கவர்ச்சிப் பொறி ஏக்கருக்கு 5 வீதம் வைப்பதன் மூலம் குருத்துப்பூச்சிகள் நடமாட்டத்தை கண்காணிக்கலாம். பொறியில் உள்ள இனக்கவர்ச்சி குப்பியை 3 வாரங்களுக்கு ஒரு முறை மாற்றவேண்டும்.
தகவல்: டாக்டர் B. சந்திரசேகரன், தலைவர் மற்றும் பேராசிரியர், மண் மற்றும் நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலையம், காட்டுத்தோட்டம். தஞ்சாவூர்.