விதையில்லா மாம்பழம்
பீகார் விவசாய பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலை தலைவர் V.P.படேல் தலைமையில் அல்போன்சா மற்றும் ரத்னா போன்ற மாம்பழ வகைகளில் கலப்பினம் செய்து விதையில்லா மாம்பழத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்த விதையில்லா மாம்பழத்தின் எடை 200 கிராம் இருக்கும். இந்த மாங்காய் பழுத்தவுடன் மஞ்சள் நிறமாக இருக்கும். விதையுள்ள மாம்பழத்தை விட இந்த விதையில்லா மாம்பழத்தில் நார் சத்து குறைவாகவே இருக்கும்.
இந்த விதையில்லா மாம்பழம் ஏற்றுமதிக்கு தகுந்தகாக உள்ளது. 2015 – ஆம் ஆண்டிற்குள் விதையில்லா மாம்பழச் செடியை இந்திய சந்தையில் வழங்குவதாக பீகார் விவசாய பல்கலைக்கழகம் கூறியுள்ளது.
தேசிய தோட்டக்கலை மீஷன் – ல் பீகார் விவசாய பல்கலைக்கழகம் மாம்பழ சாகுபடியில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்த பல்கலைக்கழகம் பீகார் மாநிலத்தின் மாம்பழம் விளைவிக்கும் இடத்தில் 50% (38,000ஹெக்டரை) கொண்டு விளைவித்துள்ளது.