சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் மண்
அமெரிக்கா மண் அறிவியல் சங்கம் (SSSA) , மண்ணின் முக்கியத்துவம் பற்றி பொது மக்களுக்கு ஆண்டு முழுவதும் ஒரு தொடர்ச்சியான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருகிறது.
மண் எவ்வாறு சுற்றுப்புறச் சூழலை பாதுக்காக்கிறது?
ஆரோக்கியமான காடுகள்:
காடுகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது, ஏனெனில் மரங்கள் நிறைந்திருப்பதால் காடுகள் மிகவும் அழகாக இருக்கிறது. மண் தான் மரங்களை ஆரோக்கியமாக வைக்கிறது. மரங்கள் வளர்வதற்கு தேவையான ஊட்டச்சத்தை மண் வழங்குகிறது. காடுகளில் உள்ள மரங்கள் தீ மூலம் எரிந்து விட்டால் , மண் தான் அந்த மரங்களுக்கு மறுவாழ்வு தருகிறது.
சமவெளி பகுதியில் :
மரங்கள் அற்ற பகுதியில் புல்தரையில் உள்ள மண் தரமான, மென்மையான மற்றும் ஆழமாக உள்ளன. கோடைகாலம் மற்றும் குளிர்காலத்தில் புல்வெளிகளின் கீழ் மண்ணை அமைக்கிறார்கள். புல்வெளித் தாவரங்கள் குளிர் காலங்களில் இறக்கின்றன. ஆனால், இலைகள் மற்றும் வேர்கள் இருக்கும். இவ்வாறு இருப்பது நல்லது, ஏனெனில், இறந்து போன தாவரங்கள் உயிருடன் இருப்பது போலவே காணப்படும். அதனால் சமவெளி பகுதிகள் அழகாக காணப்படுகிறது. மேலும் அந்த சமவெளியில் உள்ள புல்களுக்கு உயிர்மம் சேர்க்கப்படுகிறது. இது மண் வளத்தை அதிகப்படுத்துகிறது. இதனால் சமவெளிகள் மாநிலங்களில் உள்ளவர்களுக்கு தானிய பயிர்கள் அதிகம் வளர உதவுகிறது.
ஏரி, ஆறு மற்றும் ஓடை:
சமவெளி நீரோடைகளில், நீர் பாதிப்படைகிறது. அதில் மண் அரித்து செல்கிறது. அதனால் தண்ணீரின் தரம் மற்றும் அளவை பாதிக்கிறது. ஒவ்வொரு துளி தண்ணீரும் மண் மூலமாக வர கூடியவை ஆகும். மண், தண்ணீரை சுத்திகரிக்க உதவுகிறது.