பாரம்பரிய நெல் ரகங்களில் நன்கு ஒட்டும் பசைத்தன்மை கொண்ட ரகம் பிசினி. நூற்றி இருபது நாள் வயதுடையது. மோட்டா ரகம், சிவப்பு நிற அரிசி கொண்டது.
ஐந்தடி உயரம் வரை வளரும் தன்மையுள்ளது. எல்லா ரக மண்ணுக்கும் ஏற்றது. வறட்சி, வெள்ளத்தைத் தாங்கி மகசூல் கொடுக்கும். ஏக்கருக்கு 28 மூட்டை கிடைக்கும்.
நேரடி விதைப்பு, நடவு முறைக்கு ஏற்ற ரகம். இயற்கை எரு மட்டும் இட்டால் போதும். பூச்சி தாக்குதல் இருக்காது. எளிமையாகச் சாகுபடி செய்யலாம்.
உளுந்து மற்றும் பிசினி அரிசி கலந்து களி செய்து சாப்பிட்டால் இடுப்பு வலி நீங்கும். மாதவிடாய் கோளாறுகள் மறையும். பிசினி அரிசி கஞ்சி வைத்துக் கொடுத்தால், சுகப்பிரசவத்துக்கு உதவும். இதை அவல் செய்து சாப்பிடச் சுவையாக இருக்கும். உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பைக் குறைக்கக்கூடிய தன்மை கொண்டது இந்த நெல் வகை.
நெல் ஜெயராமன் தொடர்புக்கு: 09443320954
நன்றி: ஹிந்து